நவீன் சந்திரா நடிக்கும் 51வது படம்

படப்பிடிப்பு நிறைவு

ஆர்.பி. பாலா மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். ஆர்.பி. பாலா இயக்கும் இப்படம் நவீன் சந்திராவின் 51-வது திரைப்படமாகும்.

‘லெவன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நவீன் சந்திரா, இப்படத்தில் புதுமையான கதைக்களத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 26-ம் தேதி சென்னையில் நிறைவடைந்தது.

ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார்.

அஜய் மனோஜ் படத்தொகுப்பையும், டி. கிராபோர்டு கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். மோகன் ராஜா பாடல்களை எழுதியுள்ளார். ராஜா நல்லையா ஒலிப்பதிவுப் பணியை மேற்கொண்டுள்ளார். அனீஷா ரெஹானா மற்றும் ஹகினோ ஷுன்சுகி கெவின் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகளை முடித்து இப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Read Previous

‘மூக்குத்தி அம்மன் 2’ டிரைலர்

Read Next

வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’