‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதற்கு சமந்தா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ’புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 2-ம் பாகம் தயாராகி வருகிறது.
முதல் பாகத்தில் ‘ஊம் சொல்றீயா’ என்ற பாடல் மிகவும் பிரபலம். அனைத்து மொழிகளிலுமே இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பும், படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்தப் பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார். இதற்காக அவருக்கு பெரிய தொகை ஒன்று சம்பளமாக கொடுக்கப்பட்டு இருந்தது.
2021-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு, தற்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் சமந்தா. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது, ‘ஊம் சொல்றீயா’ என்ற பாடல் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு சமந்தா கூறியிருப்பதாவது:
“நடிகையாக ஒரு அனுபவத்தைப் பெறுவதற்காகவே ’புஷ்பா’ படத்தின் பாடலில் நடனமாட ஒப்புக் கொண்டேன். அந்தப் பாடல் முதல் ஷாட் படமாக்கும் போது பயந்து நடுங்கினேன். நான் போதிய அளவுக்கு அழகாக இல்லை, தோற்றமளிக்கவில்லை என்ற நம்பிக்கை இல்லாமல் சில நேரங்கில் இருந்திருக்கிறேன். பின்பு சங்கடமான சூழலில் ஈடுபடுத்திக் கொண்டு கடக்க கற்றுக் கொண்டேன்.
அந்தப் பாடலின் வெற்றிக்குக் காரணம் பாடல் வரிகளும் ஒரு காரணம். அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்களை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன். நாம் அனைவரையும் நல்ல முறையில் பார்க்க முடியும். ’ஊம் சொல்றியா’ பாடலைப் போல இன்னொரு பாடலுக்கு நடனமாட கேட்டால் கண்டிப்பாக பண்ண மாட்டேன்.”
இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.