எப்படி சமாளிக்கப் போகிறது நடிகர் சங்கம் ?

விஜயகாந்த்தின் மறைவிற்கு தென்னந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் அனைவரது மத்தியிலும் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கி இருக்கிறது,

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், தேமுதிக கட்சியின்  நிறுவனத் தலைவர் கேப்டன் பிரபாகரன் டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அவருடைய மறைவு தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியது. விஜயகாந்த்தின் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு தமிழகமெங்கும் இருந்து பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

விஜயகாந்த்தின் மறைவுக்கு தென்னந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள், திரையுலகினர் மத்தியில் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உருவாக்கி இருக்கிறது. தென்னந்திய நடிகர் சங்கம் கடனில் இருக்கும் போது அதனை மீட்டெடுத்தவர் விஜயகாந்த். இதற்காக ரஜினி, கமல், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களையும் ஒன்று திரட்டி கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். கலை நிகழ்ச்சியின் மூலம் வந்த பணத்தை வைத்து நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார்.

இன்று நடிகர் சங்கத்திற்கு என்று ஒரு நிலம் இருக்கிறது என்றால் அதற்கு காரணமானவர்களில் ஒருவர் விஜயகாந்த். அவருடைய மறைவுக்கு தென்னந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் முறையான அஞ்சலி செலுத்தப்படவில்லை. எந்தொரு முன்னணி நடிகரும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை. உறூதிப்பினர்கள் அனைவரும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அனைத்து உதவிகளையும் செய்திருந்தால் தான், விஜயகாந்த்திற்கு சிறப்பான மரியாதையாக இருந்திருக்கும்.

ஆனால், இறுதி ஊர்வலத்தில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு மலர்வளையம் மட்டுமே வைக்கப்பட்டது. இந்தச் செயல் அனைவருடைய மத்தியில் பெரும் கோபத்தை உருவாக்கியுள்ளது. மேலும், முன்னணி நடிகர்கள் பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளிநாடு சென்றுவிட்டனர். அங்கிருந்து வீடியோ, அறிக்கை என்றே தங்களுடைய இரங்கலைத் தெரிவித்தார்கள்.  விஜயகாந்த் மறைவு கேள்விபட்டு, உடனடியாக இந்தியா திரும்பி அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஏனோ எந்தவொரு நடிகரும் வரவில்லை.

தற்போது முன்னணி நடிகர்கள் சென்னை திரும்பியவுடன், நேரடியாக விஜயகாந்த் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள். அப்போது பத்திரிகையாளர்கள் ஏன் வரவில்லை என்று முன்வைக்கவுள்ள கேள்விக்கு, பதிலையும் தயார் செய்து கொண்டு தான் வருவார்கள். ஆனால், அவர்களுடைய செயலை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

Read Previous

விஜயகாந்த் மகனுக்கு கை கொடுப்பாரா விஜய் ?

Read Next

அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படக்குழு