ஆல் இன் பிக்சர்ஸ் விஜயராகவேந்திரா வழங்க, அறிவழகன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில் அருண் விஜய், ஸ்டெபி பட்டேல் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பார்டர்’.
இப்படம் அக்டோபர் 5ம் தேதியன்று வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
அருண் விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த ‘யானை’ படம் வியாபார ரீதியாக வெற்றியைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் இது.
இப்படத்தின் இந்திய தியேட்டர்கள் வெளியீட்டு உரிமையை 11:11 புரொடக்ஷன்ஸ் பிரபு திலக் பெற்றுள்ளார்.
பட வெளியீடு பற்றி அவர் கூறுகையில்,
தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான அருண் விஜய் சாரின் ‘பார்டர்’ படத்தை 11:11 புரொடக்ஷன்ஸ் சார்பில் வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் எப்பொழுதும் உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடவே விரும்புகிறோம், சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் மனம் கவரும் படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, ‘பார்டர்’ படம் அனைத்து சிறப்புகளையும் ஒருங்கே கொண்டுள்ளது. தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ்த் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும் இயக்குநர் அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். இந்தத் திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்பத் திறமையாளர்களின் அருமையான உழைப்பு, அருண் விஜய் சாரின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச் சிறந்ததாக மாற்றியுள்ளது. நாங்கள் இப்படத்தினை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
இ