நிதின் சத்யா கதாநாயகனாக நடிக்கும் ‘கொடுவா

பிளேஸ் கண்ணன், ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘கொடுவா’. 

இப்படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார்.

இராமநாதபுரத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் யதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்புப் பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை.

‘பேச்சலர்’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார். ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் 'ஐங்கரன்' கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

Read Previous

ஹாலிவுட் படங்களின் பிரமிப்பைத் தரும் ‘கோப்ரா’ – விக்ரம்

Read Next

‘பார்டர்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Most Popular