கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா, ஜோதிகா

தமிழ்த் திரையுலகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு சில படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி நடந்து வருகின்றன.

கொரானோ பரிசோதனை கட்டாயம், 100 பேர் மட்டுமே படக்குழுவில் இடம் பெற வேண்டும், தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சில மூத்த நடிகர்கள் ஏற்கெனவே கொரானோ தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்டார்கள். சிலர் தற்போதுதான் போட்டு வருகிறார்கள்.

நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகாவுடன் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஆனால், சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி பத்து தினங்களுக்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் தான் கொரானோவைக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள்.

Read Previous

ஜூன் 22ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Read Next

ஜூன் 23ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Most Popular