விஜய் டிவியில் தொகுப்பாளரான ‘பிக் பாஸ்’ அர்ச்சனா

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 14, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு  காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ‘காதலே காதலே’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இதில் நிஜ ஜோடிகள் மற்றும் திரையில் பார்த்து ரசித்த ஜோடிகள் பங்கேற்கின்றனர்.   

காதலுடன் நடனம் இசை மற்றும் புரிதல் போன்றவற்றை இந்த ஜோடிகள் வழங்க உள்ளனர்.  

நிஜ வாழ்வில் தம்பதியர்களான  சித்து – ஸ்ரேயா, சஞ்சீவ் – மானசா, வினோத் – சிந்து, மணிமேகலை – உசேன், நிஷா – ரியாஸ், தங்கதுரை – அருணா, ரேஷ்மா – மதன் பங்கேற்கின்றனர். 

திரையில் ஜோடிகளாக நடிக்கும் பிரஜின் – ரேஷ்மா, பவித்ரா – திரவியம், நவீன் – நேஹா, தர்ஷா- புகழ்,  அருண் – ஃபரினா, பாலா – ரித்விகா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட அர்ச்சனா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஜீ தமிழ் டிவியில் தொகுப்பாளராக இருந்த அர்ச்சான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த டிவியை விட்டு விலகினார். தற்போது விஜய் டிவியில் தன் தொகுப்பாளர் பணியைத் தொடர்கிறார்.
 
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா அவர்களின் பாடல்களுடன், ‘காதலே காதலே’ நிகழ்ச்சி பல்வேறு காலகட்டங்களை, காதல் ததும்ப நேயர்களை அழைத்து செல்லவிருக்கிறது.  

பிப்ரவரி 14 மாலை 3 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

பிப்ரவரி 9ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

மக்களை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறேன் – சந்தானம்

Most Popular