விக்னராஜன் இயக்கத்தில், வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் மற்றும் பலர் நடித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘அந்தகாரம்’.
‘ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில்’ படங்களை இயக்கிய அட்லீ இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
கமலை சந்தித்தது பற்றி தயாரிப்பாளர் அட்லீ, “எப்போதும் எங்களுடனும், எங்களுக்கு ஆதரவாகவும், இருப்பதற்கு மிக்க நன்றி சார். உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு எப்போதும் ம், எதையாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்றும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கும் சார்,” என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் நாயகர்களில் ஒருவரான அர்ஜுன் தாஸ், “நான் நடிகராக வேண்டும் என்பதற்கு கமல்ஹாசன் சாரும் ஒரு காரணம். பல வருடங்களாக அவரது அலுவலகம் வழியாக பல முறை சென்றிருக்கிறேன். அவரைப் பார்க்க வேண்டும், சந்திக்க வேண்டும், ஆசீர்வாதம் பெற வேண்டும் என நினைப்பேன். இந்த நாளை என்னால் என்றும் மறக்க முடியாது, நன்றி சார்,” எனத் தெரிவித்துள்ளார்.