‘மாஸ்டர்‘ ஓடிடி ரிலீஸ், மறுத்த விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’.

இப்படம் கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டிய படம். ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக தள்ளிப் போய்விட்டது.

படத்தின் வெளியீடு எப்போது என்று உறுதியான பின்தான் டிரைலர் வெளியீடு பற்றியும் அறிவிக்க உள்ளார்களாம்.

இதனிடையே, இந்த ஊரடங்கைக் காரணமாக வைத்து சில படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட சில நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

‘ஆர்கே நகர்’ படம் சில நாட்களுக்கு முன் வெளியானது. அடுத்து ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ வெளியாக உள்ளது. மேலும் சில படங்கள் பேசி முடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்திற்கும் ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் மிகப் பெரும் தொகையைக் கொடுக்க முன் வந்ததாம். அது பற்றிய தகவல் விஜய்க்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன் ரசிகர்கள் தியேட்டர்களில் படத்தைக் கொண்டாடத்தான் நான் நடிக்கிறேன். எனவே, படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாக வேண்டும் என்று சொல்லி அதற்கு உறுதியாக மறுப்புத் தெரிவித்துவிட்டாராம்.

படம் எப்போது வெளிவந்தாலும் அது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

Read Previous

ஜீ தமிழ் – ஜீ ஹவுஸ் பார்ட்டி, புதிய ஆன்லைன் மியூசிக்கல் கேம் ஷோ

Read Next

தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்த ‘ஜகமே தந்திரம்’ குழு

Most Popular