கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.
கொரானோ ஊரடங்கு மட்டும் இல்லையென்றால் இப்படம் நேற்று மே 1ம் தேதி வெளியாகி இருக்கும்.
கடந்த ஒரு மாத காலமாகவே எந்த ஒரு படம் சம்பந்தப்பட்ட அறிவிப்பும் பெரிதாக வரவில்லை. எந்தப் படம் எப்போது வரும் என அப்படங்களில் நடித்துள்ள ஹீரோக்களின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
நேற்று மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் விளம்பரம் எதுவும் வெளியாகாது என முன்னதாகவே அப்படத்தின் தயாரிப்பாளர் சொல்லிவிட்டார்.
ஆனால், தனுஷ் ரசிகர்களை அதன் தயாரிப்பாளர் ஏமாற்றவில்லை. நேற்று டுவிட்டரில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஊரடங்கு முடிந்ததும் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
தனுஷ் ரசிகர்களுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது