தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு.
பொங்கலுக்கு வெளிவந்த ‘சரிலேறு நீக்கெவரு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருடன் இணைந்து பணி புரிய பல இயக்குனர்கள் ஆசைப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஊரடங்கு நேரத்தில் அவருக்கு பலர் கதைகளை அனுப்பி வருகிறார்களாம். வீட்டில் அவர் ஓய்வாக இருப்பதால் நிச்சயம் கதைகளைப் படிப்பார் என்பது அவர்களது ஆசையாக இருக்கிறது.
ஆக்ஷன் ஹீரோவாகவும், குடும்பத்துடன் படத்தைப் பார்த்து ரசிக்கும் ஹீரோவாகவும் அவர் இருப்பதே அதற்குக் காரணம்.
‘சரிலேறு நீக்கெவரு’ படத்தின் மூலம் தொடர்ச்சியாக மூன்று 100 கோடிப் படங்களைக் கொடுத்த மகேஷ் பாபு அப்படத்திற்குப் பிறகு, எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஊரடங்கு முடிந்ததும் அது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.