பதவி எனக்கு ரீ என்ட்ரி – சாய்குமார்

      தென்னிந்திய மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்து விட்டு இன்னமும் டப்பிங், நடிப்பு என பிஸியாக இருக்கும் நடிகர் சாய்குமாரை பதவி படத்திற்காக அவர் நடித்த கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தவரை சந்தித்தோம்.

      “இந்த பதவி படத்தில் எனது கதாபாத்திரம் ரொம்பவும் துணிச்சலாக உருவாக்கப்பட்டதாகும். அரசியல் சாட்டை வசனம் தியேட்டரில் பலத்த வரவேற்பை கொடுக்கும். போக்கிரி படத்திற்கு வசனம் எழுதிய வி.பிரபாகர் அனல் தெறிக்கிற மாதிரி வசனம் எழுதி கொடுத்திருக்கிறார்”.

     “எங்களோட அப்பா சர்மாவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்தான். சின்னப் பையனாக இருக்கும் போது, அவருடன் டப்பிங் தியேட்டருக்குப் போய் வந்த பழக்கம் அப்படியே நானும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகி விட்டேன்” .

     “சிவாஜி சார் மேல அதிகமான பக்தி உண்டு. அவர் நடிப்பைப் பார்த்து பார்த்து நடிகனாகி விட்டேன். இன்று கூட மேக்கப் போடும் போது அவரது போட்டோவை வணங்கி விட்டுத்தான் மேக்கப் போடுகிறேன். சில காட்சிகளில் அவரது நடிப்பில் சாயல் வந்து விடும். அவரை பிரதிபலிக்காமல் நடிக்க முடியாது”.

     “டப்பிங், நடிப்பு இரண்டையுமே நான் நேசிக்கிறேன். டாக்டர் ராஜசேகர் படங்களுக்கு நான் டப்பிங் பேசி அந்த குரல் பாப்புலராச்சி. அதுக்குப் பிறகு நான் நடிச்ச படத்துக்கு நானே டப்பிங்  பேசி  நடிச்சால், டாக்டர் ராஜசேகர் எனக்கு டப்பிங் பேசியிருக்காருன்னு சொன்னாங்க”.

     “பாட்ஷா உட்பட பல படங்கள் தெலுங்குலு ரிலீசானப்ப ரஜினிக்கு டப்பிங் பேசினேன்.  அதன் மூலம் இன்னும் பாப்புலரானேன்.

     “செவன்த் சென்ஸ் லாரன்ஸ் பிரசாத் தயாரிக்கும் ‘பதவி’ படம் சாட்டையடி வசனத்திற்காக பலரால் பாராட்டப்படும். இந்த படம் எனக்கான செகன்ட் ரவுன்ட் படமிது,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் சாய்குமார்.

Read Previous

இசைஞானியின் இசை வசந்தம் – ஒரு நேரடி ரிப்போர்ட்

Read Next

முகமூடி – விமர்சனம்