வசந்தபாலன் இயக்கும் ‘காவியத் தலைவன்’

     ரவான் படத்தைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கும் படத்திற்கு ‘காவியத் தலைவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக சித்தார்த் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பாக சஷிகாந்த் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே சித்தார்த் நடித்த ‘காதலி சொதப்புவது எப்படி’ படத்தைத் தயாரித்தவர்.

தெலுங்குக்குப் பொருத்தமான தலைப்பும், மற்ற நட்சத்திர தேர்வுகளும் நடந்து வருகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

யுவன் – செல்வராகவன் இணைகிறார்கள்…

Read Next

நாளை 3 இசை வெளியீடு

Most Popular