சந்தானம், தற்போது ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நாயகனாகவும், மற்றும் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
எந்த ஒரு நகைச்சுவை நடிகர் முன்னுக்கு வந்தாலும் அவர்களை நாயகனாக நடிக்க வைப்பதற்கென்றே பலர் முயற்சிப்பார்கள். வளர்ந்து வரும் நேரத்திலேயே சந்தானம் ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக நடித்து, அப்படத்துடன் நாயகன் கனவுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.
மீண்டும் தற்போது நாயகனாக நடிக்க ஆரம்பித்ததும், இன்னும் பலர் அவரை துரத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது கோடம்பாக்கம் வட்டாரங்களில் பரவி வரும் ஒரு செய்தி மற்றுமொரு படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கப் போகிறார் என்பதே.
தெலுங்கில், ராஜ மௌலி இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சுனில் நடித்து வெளிவந்த ‘மரியாதை ராமண்ணா’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். அதில் நாயகனாக நடிப்பதற்கு சந்தானத்திடம் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ‘சேட்டை ’ படத்தை இயக்கி வரும் கண்ணன் இந்த படத்தை இயக்கலாமென்றும் தெரிகிறது.