ஹிந்திப் படம் இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்

‘மன்மதன் அம்பு’ படத்திற்குப் பிறகு தமிழ்ப் படம் எதையும் இயக்காத இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கோச்சடையான்’ படத்திற்கு டைரக்ஷன் மேற்பார்வை மட்டும் செய்கிறார்.

தற்போது,  ஹிந்திப் படம் ஒன்றை முதன் முறையாக இயக்கி வருகிறார். சஞ்சய் தத் நாயகனாக நடிக்கும் இந்த படம், தமிழில் விக்ரம் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய ‘சாமி’ படத்தின் ரீமேக் ஆகும். நாயகியாக பிராச்சி தேசாய் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முதல் ஷெட்டியூல் முடிவடைந்து விட்டது. ஹைதராபாத் மற்றும் மும்பையில் இது நடைபெற்றது.  தயாரிப்பாளர்களின் இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஹிந்தியிலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

Read Previous

துப்பாக்கி – இசை வெளியீடு

Read Next

ரீமேக் படத்தில் நாயகனாக சந்தானம் !

Most Popular