இரண்டு படங்களில் கார்த்தி…

     சகுனி படத்திற்குப் பிறகு கார்த்தி தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்குப் பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். முதலில் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பிரியாணி’, அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’.

பிரியாணி படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20ம் தேதி ஆரம்பித்து தொடர்ந்து பத்து நாட்கள் நடக்க இருக்கிறது. இதற்கடுத்து, ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில தொடர்ந்து ஒரு மாதம் நடிக்க இருக்கிறார்.

பிரியாணி படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க, நயன்தாராவிடமும், இலியானாவிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. யாரிடம் கால்ஷீட் இருக்கிறதோ அவர் கார்த்தியுடன் ஜோடி சேருவார் எனத் தெரிகிறது.

Read Previous

‘7 படங்கள்’ தயாரிக்கப் போகும் செல்வராகவன் !

Read Next

இன்றைய ரிலீஸ்…