மெரினா படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் தற்போது இயக்கி வரும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. விமல், சிவ கார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இரு ஹீரோக்களான விமல், சிவகார்த்திகேயன் இருவரையும் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் தான். அதனால் இப்படத்தின் படப்பிடிப்வை வெகு விரைவாகவே முடித்து விட்டார் பாண்டிராஜ். இன்னும் பாடல்கள் மட்டும்தான் படமாக்கப்பட வேண்டும்.
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகவிருக்கும் பாடல்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ். விரைவில் யுவனிடமிருந்து பாடல்கள் கிடைத்தவுடன், பாடல்களுக்கான படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
சிக்கனமாக படமெடுத்தாலும் சிறப்பாக படமெடுப்பவர் என பெயரெடுத்துள்ள பாண்டிராஜ், இந்த ‘பில்லா, ரங்கா’ வையும் ஜெயிக்க வைப்பார் என எதிர்பார்க்கலாம்.