‘கள்ளத் துப்பாக்கி’யும் தீபாவளி ரிலீஸ்…

     மல்ஹாசனின் உதவியாளர் கே.சி. ரவிதேவன் தயாரிக்கும் படம் ‘கள்ளத் துப்பாக்கி’. இத்தனை நாட்களாக ‘துப்பாக்கி’ படத்தின் தலைப்புடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது ரிலீசிலும் மோதிக் கொள்ள இருக்கிறார்கள். கள்ளத் துப்பாக்கியும் தீபாவளிக்கு வெளிவர தயாராக உள்ளது.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள படம். ‘இன்டர் கட்’ என்று சொல்லப்படும் படத் தொகுப்பு நுணுக்கத்தை அதிக அளவில் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

விக்கி, விஜித், பிரபாகரன், எஸ்.பி. தமிழ்ச் செல்வன், குட்டி ஆனந்த், ஷாவாந்திகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

எஸ்.கே.பாலசந்திரன் இசையமைக்க லோகியாஸ் எழுதி இயக்கியுள்ளார்.

Read Previous

‘கோச்சடையான்’ – பொங்கல் ரிலீஸ்…

Read Next

பாடலுக்கு காத்திருக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’