‘கும்கி’ தீபாவளி ரிலீஸ் இல்லை…

தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த ‘கும்கி’ திரைப்படம் இன்னும் சில வாரங்கள் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ‘சுந்தரபாண்டியன்’ லட்சுமி மேனன் நடிக்கிறார்.

இயக்குனர் பிரபு சாலமன் தற்போது திடீரென ஒரு சில காட்சிகளை மீண்டும் படமாக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. விக்ரம் பிரபு சம்பந்தப்பட்ட சில க்ளோஸ் அப் காட்சிகளையும், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட சில காதல் காட்சிகளையும் மீண்டும் படமாக்க உள்ளார்.

‘மைனா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெளி வர உள்ள இந்த படம், முழுமையாக பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என இயக்குனர் பிரபு சாலமன் முடிவெடுத்துள்ளதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், அவர் மீண்டும் படப்பிடிப்பு நடத்துவதைப் பற்றி கவலை கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

Read Previous

21 நிமிடம் தூக்கப்பட்ட ‘மாற்றான்’

Read Next

ராகவா லாரன்ஸ் மீது புகார்

Most Popular