கடந்த வெள்ளியன்று வெளியான ‘மாற்றான்’ திரைப்படம் மிகவும் நீளமாக இருக்கிறது என பல ரசிகர்கள், விமர்சகர்கள் கூறியிருந்தனர். இதனை கருத்தில் கொண்டு படத்தின் நீளம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய, 21 நிமிடங்களுக்கு படத்திலிருந்து காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளன. இதன் மூலம் படத்தை எந்த தடங்கலும் இல்லாமல் ரசிக்கலாம் என மாற்றான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2 மணி நேரம் 45 நிமிடங்களாக இருந்த திரைப்படம் தற்போது 2 மணி நேரம் 25 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இனியாவது விறுவிறுப்பாக ரசிக்க முடியுமா என ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.