திடீர் விசிட் செய்த ‘சூப்பர் ஸ்டார்’

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, தமிழ், தெலுங்கில் ஒரு படத்தைத் தயாரித்து  வருகிறார்.

தமிழில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ எனவும் தெலுங்கில் ‘குண்டல்லோ கோதாரி’ எனவும் பெயரிடப்பட்டுள்ளன. ஆதி, டாப்ஸீ இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பின்னணி இசை வேலைகள் சென்னையில் நடந்து வருகின்றன. இப்படத்திற்கு இசையமைப்பவர் இளையராஜா.

இளையராஜா இசைமைத்து வரும் ஸ்டுடியோவிற்கு திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருடைய நண்பர் மோகன் பாபுவுடன் வந்து அதிர்ச்சி அளித்துள்ளார். அப்படத்தின் இயக்குனர் குமார் நாகேந்திராவிடம் படத்தின் கதையைப் பற்றி விசாரித்து அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

1980களில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம்தான் ‘மறந்தேன் மன்னித்தேன்’. சூப்பர் ஸ்டார் வந்து பாராட்டிச் சென்று விட்டதால் இனி இந்த படத்திற்கு அறிமுகமே தேவையிருக்காது.

Read Previous

‘ஐட்டம் டான்ஸ்’ ஐ நம்புகிறேன் -சமீரா ரெட்டி

Read Next

21 நிமிடம் தூக்கப்பட்ட ‘மாற்றான்’

Most Popular