‘வேட்டை’ படத்திற்குப் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் சமீரா ரெட்டி. ஆனால், ஒரு இந்திப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஒன்று ஆடி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
பிரபல இயக்குனர் பிரகாஷ் ஜா இயக்கத்தில்‘சக்கரவீயுக்’ என்ற படத்தில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். ‘குந்தா கோல்’ என்று ஆரம்பமாகும் இந்த பாடலை பாடியிருப்பவர் சுனிதி சௌஹான்.
இது குறித்து சமீரா ரெட்டி கூறுகையில், “ இந்த காலத்தில் இம்மாதிரியான பாடல்களுக்கு ரசிர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எனவே, இம்மாதிரியான பாடல்கள் எனக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நிச்சயம் இந்த பாடல் இந்திய அளவில் ஒரு அலையை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.