‘ஸ்ரீ ராமராஜ்யம்’ தெலுங்குப் படத்தில் நடித்ததற்காக ஆந்திர மாநில அரசின் சிறந்த நடிகை என்ற ‘நந்தி’ விருதைப் பெற்றிருக்கிறார் நயன்தாரா. முதல் முறையாக அவர் இந்த விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீராமராஜ்யம் படத்தில் ராமர் மனைவி சீதா தேவியாக நயன்தாரா நடித்திருந்தார்.
விருது பெற்றது குறித்து நயன்தாரா தெரிவிக்கையில், “ஸ்ரீராமராஜ்யம்’ படத்தில் பணிபுரிந்தது ஒரு தெய்வீகமான அனுபவம். இந்த படத்தை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். சீதா தேவி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மதிப்பு மிக்க ஒரு விருதைப் பெற்றுள்ளேன். இக் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்சசியைத் தந்தது.
சீதா கதாபாத்திரத்தில் முதலில் நான் நடிப்பதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நடிகர் பாலகிருஷ்ணாதான் கண்டிப்பாக நான்தான் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆதரவாக இருந்தார்.
என்னைத் தேடி வரும் எந்த சரித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். மீண்டும் சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதென்றாலும் சம்மதம்தான்” எனத் தெரிவித்துள்ளார்.