ராகவா லாரன்ஸ் மீது புகார்

    பிரபல இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது தயாரிப்பாளர்கள் இருவர் புகார் கொடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர் ராகவா லாரன்ஸ்.

இவரது இயக்கத்தில் சமீபத்தில் பிரபாஸ், தமன்னா நடித்து வெளிவந்த படம் ‘ரிபெல்’.  இப்படத்தின் தயாரிப்பாளர்களான ஜே. பகவான் மற்றும் புல்லா ராவ் ஆகிய இருவரும் ராகவா லாரன்ஸ் மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

ரிபெல் படத்தை முதல் பிரதி அடிப்படையில் 22.5 கோடிக்குள் முடித்துத் தருவதாக ராகவா லாரன்ஸ் கூறினார். ஆனால், தேவையற்ற செலவுகளால் படத்தை 40 கோடி வரை செலவு செய்து எடுத்து முடித்தார் என புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிலுக்கு ராகவா லாரன்ஸ் இயக்குனர்கள் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் மீது புகார் தெரிவித்துள்ளார். ரிபெல் படத்தின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை தனக்குத் தெரிவிக்காமலே விற்று விட்டார்கள் எனவும், டப்பிங் உரிமையை தனக்குத் தருவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தார்கள் எனவும் கூறியுள்ளார்.

Read Previous

‘கும்கி’ தீபாவளி ரிலீஸ் இல்லை…

Read Next

‘நீர்ப்பறவை’யில் நீக்கப்பட்ட வார்த்தைகள்..