‘நீர்ப்பறவை’யில் நீக்கப்பட்ட வார்த்தைகள்..

    நீர்ப்பறவை திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார்.இதில் ஒரு பாடலில் பைபிள் சொற்களை வைத்து பாட்டெழுதியிருந்தார். இதற்கு கிறிஸ்துவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இப்போது, அந்த பாடலில் இடம் பெற்ற சில வார்த்தைகளை நீக்கியிருக்கிறார்கள்.

பேரா.எஸ்ரா சற்குணம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று,‘நீர்ப்பறவை’ திரைப்படத்தில் பற.. பற.. என்கிற பாடலில் இடம் பெற்ற… ஸ்தோத்திரம் மற்றும் சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறேன்.. என்கிற சொற்களை நீக்கியிருக்கிறார்கள்.

மேலும் நீர்ப்பறை திரைப்படம், சிறுபான்மை மக்களின் அன்பான வாழ்க்கையை சொல்லும் திரைப்படம்  என அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Read Previous

ராகவா லாரன்ஸ் மீது புகார்

Read Next

‘ஆண்’ வேடத்தில் நடிக்கப் போகும் ப்ரியாமணி’