‘ஆண்’ வேடத்தில் நடிக்கப் போகும் ப்ரியாமணி’

     ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகையாக விளங்கி வரும் ப்ரியாமணி விரைவில் ஒரு மலையாளத் திரைப்படத்தில் ‘ஆண்’ கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.

 ‘Yes, I am’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மஜீத் மனசேரி என்ற இயக்குனர் இயக்கவிருக்கிறார். ஒரு ஆண் மகன், பிறப்பு குறைபாட்டால், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு பெண்ணாக வாழ வேண்டியிருக்கிறது. ஒரு நைட் கிளப்பில் டான்சராக இருக்கும் அவரது 26 வருட வாழ்க்கையை மறைத்து வாழ வேண்டியதன் அவசியம் என்ன ? என்பதை இந்த படம் சொல்லவிருக்கிறது.

இதில் ஆணாக பிறந்து பெண்ணாக வாழும் கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரியாமணியை அணுகியிருக்கிறார்கள். அவரும், படத்தின் கதையை படித்து வருவதாகவும் விரைவில் இதைப் பற்றி சொல்வதாகவும் சொல்லியிருக்கிறார்.

அடுத்த தேசிய விருதுக்கு தயாராகிறாரா ப்ரியாமணி ?

Read Previous

‘நீர்ப்பறவை’யில் நீக்கப்பட்ட வார்த்தைகள்..

Read Next

சீமான் இயக்கத்தில் ‘பகலவன்’