வெளிநாட்டில் தயாரான ‘அடுத்த கட்டம்’

   
பெ
ரும்பாலும் தமிழ் சினிமாக்களில் பாடல்காட்சிகளுக்காத்தான் வெளி நாடுகளுக்குப் பயணமாவார்கள். அதுவும் இங்கிருந்து செல்லும் தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டுதான் அதனைப் படமாக்கியும் வருவார்கள்.

முதல் தடவையாக ஒரு தயாரிப்பாளர் மட்டும் மலேசியா, சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருக்கும் தமிழ் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு மிரட்டும் ஒரு திகில் பட்த்தை எடுத்து வந்திருக்கிறார்கள். அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதா..? படத்தின் பெயரும் “அடுத்த கட்டம்” தான்.

அஸ்வின் ஸ்டுடியோஸ் ஆருர் சுந்தரம், பி.எம்.முகமது மொய்தீன், பி.எம்.ஜெயிலுல்லாப்தீன் வழங்கும்  NGP Films  நவநீதன் கணேசன் தயாரிப்பில் உருவான ‘அடுத்த கட்டம்’ படத்தின் முன்னோட்ட வெளியீடு சென்னை பிரசாத் லேப்பில்   நடந்தது. நடிகர்கள் ஸ்ரீகாந்த்,சம்பத் இயக்குனர்கள் வா.கெளதமன்,  ராஜகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் நவநீதன் கணேசன் பேசும் போது, “திகில் படம் விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் பாடல்கள் இல்லாமல் எடுத்திருக்கிறோம். முழுக்க முழுக்க மலேசிய-சிங்கப்பூர் கலைஞர்களைக் கொண்டு அடுத்த கட்டத்தை தயாரித்தது போல தமிழகக் கலைஞர்களும் மலேசிய, சிங்கப்பூர் கலைஞர்களும் சேர்ந்து பணியாற்றும் படங்கள் தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. தமிழகக் கலைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றும் போது அவர்கள் நிறையக் கற்றுக் கொள்வார்கள், படைப்பும் நன்றாக வரும்.” என்றார்.

அஸ்வின் ஸ்டுடியோஸ் ஆருர் சுந்தரம், பி.எம்.முகமது மொய்தீன், பி.எம்.ஜெயிலுல்லாப்தீன் தமிழகம் முழுவதும் அடுத்த கட்டத்தைத் திரையிடவுள்ளனர்.

Read Previous

வெளிநாடுகளில் கலக்கும் ‘துப்பாக்கி’

Read Next

சமர் – இன்று இசை வெளியீடு