‘கஜராஜு’வாக மாறும் ‘கும்கி’

     ‘மைனா’ படத்திற்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் ‘கும்கி’. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இப்போது, தமிழில் மட்டுமல்ல , தெலுங்கிலும் அறிமுகமாகப் போகிறார்.  தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் இப்படத்தை தெலுங்கில் வெளியிடுகிறார்.

‘கஜராஜு’ என தெலுங்கில் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு ஹைதராபாத்தில் இம்மாதம் 8ம் தேதி நடைபெற இருக்கிறது.   தமிழில் வெளியாகும் டிசம்பர் 14ம் தேதியன்றே தெலுங்கிலும் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

Read Previous

இளம் இயக்குனர்கள் வெளியிடும் இசை

Read Next

தன்னை மாற்றிக் கொண்ட நயன்தாரா