தன்னை மாற்றிக் கொண்ட நயன்தாரா

     ‘ஐயா’ படத்தில் அறிமுகமானதிலிருந்தே தமிழ் ரசிகர்களின் மனதில் மட்டுமல்ல, தெலுங்கு ரசிகர்களின் மனதிலும் அதிகம் இடம் பிடித்தவர் நயன்தாரா. மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கில் அதிக ரசிர்களைக் கொண்டவர்.

பொதுவாகவே இவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதையும், அவர் நடித்த படமாக இருந்தாலும் அப்படத்தின் இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு போன்ற எந்த ‘பிரமோஷன்’ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார்.

ஆனால், தற்போது அதில் ஒரு மாற்றம். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த தெலுங்கு திரைப்படமான ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்ற படம் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

தற்போது ஒரு சில தெலுங்குப் படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமிழில், உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி நயன்தாராதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான போட்டோ ஷுட் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்துள்ளது. நயன்தாராவும், உதயநிதியும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இனி, தமிழ் பத்திரிகையாளர்களையும் சந்திப்பாரா  ? பார்ப்போம்…

 

Read Previous

‘கஜராஜு’வாக மாறும் ‘கும்கி’

Read Next

அஜித்துடன் நடிக்க காத்திருக்கிறேன் – தமன்னா

Most Popular