மதுரையில் ‘பாரதிராஜாவின் அன்னக்கொடி….’ இசை வெளியீடு

akkv-1பாரதிராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்’ படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதியன்று மதுரையில் நடைபெற இருக்கிறது.

இசைஞானி இளையராஜா தலைமையேற்க மணிரத்னம் இசை தகட்டை வெளியிட, பாலுமகேந்திரா, மகேந்திரன் பெற்றுக் கொள்கிறார்கள்.

முதல் டிரைலரை இயக்குனர்கள் கே. பாக்யராஜ், கங்கை அமரன், விக்ரமன், வசந்த் வெளியிட நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு, ராதிகா, ராதா பெற்றுக் கொள்கிறார்கள்.

இரண்டாவது டிரைலரை தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ. ராஜ்கண்ணு, தாணு, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட, சரத்குமார், சேரன், ராதாரவி, குஷ்பு சுந்தர் பெற்றுக் கொள்கிறார்கள்.akkv

மேலும், விழாவில் கார்த்திக்ராஜா, யுவன்ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், பவதாரிணி, சின்மயி, சைந்தவி ஆகியோருடன் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

பாரதிராஜா இப்படத்தின் துவக்க விழாவை தேனியில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

Read Previous

பெரிய தியேட்டர்களுக்கு மாறும் ‘லட்டு’…

Read Next

த்ரிஷாவின் ‘தண்ணி’….விஷாலின் ‘வில்லன்’…