மலையாளியாக நடிக்கும் ஓவியா

oviya_00008பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக் கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ்குமார் தயாரிப்பாளராகிறார்.

பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்த விக்ரம் சுகுமாரன் இப்படத்தை இயக்குகிறார். புதுமுகம் கதிர், ஓவியா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தப் போகிறார் ஜிவி.

காதல் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஓவியா மலையாளப் பெண்ணாகவே நடிக்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

“தமிழ்ப் படங்களில் மிகவும் சுவாரசியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். ஏதாவதொரு படத்தில மலையாளப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தேன்.  இந்த படத்தின் மூலம் அது நிறைவேறப் போகிறது. ஒரு மாணவி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். அருமையான கதை, நிச்சயம் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்,” என்கிறார் இப்படத்தின் நாயகி ஓவியா.

Read Previous

‘கோச்சடையான்’ ஏப்ரல் ரிலீஸ்…

Read Next

200 கோடி கூட கொடுப்பாங்க – விஜய்