சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வரும் எனத் தெரிகிறது.
சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கோச்சடையான்’. தமிழில் முதல் முறையாக தயாராகும் ‘மோஷன் கேப்ச்சர்’ படம் இது.
தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.
தற்போது படத்தின் படத்தொகுப்பும், பின் தயாரிப்புப் பணிகளான கிராஃபிக்ஸ், ஒலி சேர்ப்பு, டப்பிங் போன்றவை நடந்து வருகின்றன.
கிராஃபிக்ஸ் பணிகள் சென்னை மற்றும் லண்டனில் உலகத்தரத்தில் உருவாகி வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் ஏப்ரல் வெளியீடாக படம் வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.