விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15 நாள் தடை

viswaroopam-image‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட தமிழக அரசு 15 நாள் தடை விதித்துள்ளது.

கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுவதும் 25ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சில முஸ்லிம் அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். முஸ்லிம்களுக்கு விரோதமான காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினர்.

படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர், தமிழக உள்துறைச் செயலர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு 15 நாட்களுக்கு படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர்கள் படத்தை வெளியிட 15 நாட்கள் தடை விதித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Read Previous

சூப்பர்ஸ்டாரை சந்தித்த சஞ்சய் தத்

Read Next

‘கோச்சடையான்’ ஏப்ரல் ரிலீஸ்…

Most Popular