விஜய் நடித்து வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்தது.
விஜய் நடித்த ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது இதுவே முதல் முறை. ரஜினிக்கு அடுத்து இந்த சாதனையை புரிந்திருப்பவர் இவர் ஒருவரே.
இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிகை ஒன்றில் கருத்து தெரிவித்த விஜய், “ இந்தி பேசும் மக்கள் அதிகம் உள்ள இந்தியாவில் இந்திப் படங்கள் 100 கோடி வசூலிப்பது பெரிய விஷயமில்லை. ஏன், அங்கே 200 கோடியைக் கூட தாண்டும். ஆனால் தமிழ்ப் படமான ‘துப்பாக்கி’ 100 கோடியை வசூலித்தது மிகப் பெரிய விஷயம்.
சினிமா பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவங்க ரசனையும் மாறிக் கொண்டே இருக்கிறது. எனவே, ரசிகர்களின் ரசனைக்கேற்றபடி படங்களைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி அவர்களைக் கவரும் விதத்தில் படம் எடுத்தால் 100 கோடி என்ன 200 கோடியைக் கூட அள்ளிக் கொடுப்பார்கள்,” என்றார்.
சீக்கிரமே இன்னொரு நல்ல படம் கொடுத்து 200 கோடியை அள்ளுங்க ஸார்….