பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே. சந்திரன் ‘யான்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறுகிறார்.
இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு மும்பை அருகே கர்ஜத் பகுதியிலும், பின்னர் ஹைதராபாத்திலும் நடைபெற்றது.
இளமை ததும்பும் காதல் ஜோடிகளாக ஜீவாவும், ‘கடல்’ நாயகி துளசியும் நடிக்கிறார்கள். ஜீவாவுக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘கோ’ படத்தில் துளசியின் அக்கா கார்த்திகாதான் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா, துளசி இருவரின் காதல் நடிப்பும் ரசிகர்களையும் வசியப்படுத்தும் என்கிறார் படத்தின் இயக்குனர் ரவி கே. சந்திரன்.
அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. அடுத்து மொரோக்கோ நாட்டிற்கு செல்கின்றனர். இதன் பின் படப்பிடிப்பு நிறைவடைகிறது.
ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த ‘யான் ’ புது அனுபவமாக இருக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.