முத்தமிடும் வயதை முடிவெடுப்பது யார் ? – பார்த்திபன் கேள்வி

kadalமீடியாக்கள் பெருகி விட்டதாலா அல்லது விளம்பர வெளிச்சம் தங்கள் மீது பாய வேண்டும் என்பதாலா தெரியவில்லை பல பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இன்றைய சூழலில் பரபரப்புக்காக நொடிப் பொழுதில் வந்து போவதைப் பற்றிக் கூட பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றன. ஏன் ? நாமே கூட சில சமயங்களில் அப்படி எழுதுவதுண்டு.

சமீபத்தில் வந்த மற்றுமொரு பிரச்சனை ‘கடல்’ படத்தில் இடம் பெற்றுள்ள முத்தக்காட்சி.

கடல் படத்தின் டிரையிலரில் சில நொடிகள் வந்து போகும் ஒரு முத்தக்காட்சி இடம் பெற்றிருந்தது. இதைப் பார்த்து பலருக்கும் அதையும் ஒரு  செய்தி (?)  ஆக்கிட வேண்டும் என்ற பேராவல். 16 வது பெண்ணை (படத்தின் நாயகி துளசிக்கு 16 வயதாம், உண்மையா எனத் தெரியாது) எப்படி முத்தக் காட்சியில் நடிக்க வைக்கலாம் என்பதே அது. அதற்காக இயக்குனரும் நடிகருமான பார்த்திபனிடம் ஒரு பெண் நிருபர் அந்த முத்தக் காட்சியைப் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பார்த்திபன் அளித்த பதில் இதோ,

“என்னைப் பொறுத்த வரையில் பத்து வயது கூட நிரம்பாத பள்ளி குழந்தைகள் காதலிப்பதாக காட்டுவதைத்தான் அருவெறுப்பாகப் பார்க்கிறேன்.

அப்படி நிறைய படங்கள் உண்டு. அதில் நானே நடித்த அழகியும் உண்டு. விவரம் இல்லாத வயதில் அவர்கள் செய்யும் குறும்பையும் விளையாட்டையும் களவாடி காட்சிப்படுத்தி விடுவதுதான் கவலை அளிக்கிறது.

சமீபத்தில் ஒரு தயாரிப்பாளரின் 7 வயது பையனைப் பற்றி 8 வயதுள்ள அவனது அக்கா , “அங்கிள்..இவன் என்ன பண்ணான் தெரியுமா..நேத்து இவனோட  லவ்வரை லிப் டு லிப் கிஸ் அடிச்சிட்டான்…என்று சொல்லிக் கொண்டே விளையாடுகிறார்கள்.

‘A’ சான்றிதழ் தராத படங்களில் உள்ள பால்யப் பருவக் காதலை குழந்தைகளோடு பார்ப்பதைத்தான் ‘A’ருவெறுப்பாக கருதுகிறேன்.

பெண் பூப்பெய்துவதை ‘புட்டு சுற்றும் விழா’வாக நடத்துவதைக் கண்டித்து ‘இவன்’ படத்தில் காட்சிப்படுத்தியதை பாராட்டியவர்களும் உண்டு. வழி வழியாக செய்து வரும் நம் புனித சடங்கை கேவலப்படுத்தி , அவர்களை புண்படுத்தி விட்டதாக என்னை காயப்படுத்தியவர்களும் உண்டு.

(சினிமாவில் வரும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சமூகத்தில் அதுவும் ஒரு சிறு பெண்ணுக்கு நடைபெறும் அவலத்தை அகற்ற முன் வந்தால் நல்ல மாற்றங்கள் உருவாகும்)

அவர்கள் சொன்ன காரணம் அந்தப் பெண் திருமணத்திற்கு தயாராகி விட்டாள் என்பதை உறவினருக்கு சொல்லவே அவ்விழா என்றார்கள். அவர்கள் கூற்றுப்படி திருமணத்திற்கே தயாராகிவிட்ட ‘வயதிற்கு வந்த பெண்’ முத்தம் கொடுப்பதாக நடிப்பதில் என்ன தவறு ?

ஆட்டோவில் பின் கழுத்தில் பெண்ணின் திருமண வயது எழுதி உள்ளது. ஓட்டு போடுவதற்கும் ஒரு வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அப்படியானால் முத்தமிடும் வயதைப் பற்றி முடிவெடுப்பது யார் ?.”

இதைத்தான் பார்த்திபன் அந்த பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலாகக் கொடுத்திருக்கிறார்…

சாரி…பதிலையும் கேள்வியாகவே கொடுத்திருக்கிறார் பார்த்திபன்…

“

Read Previous

ஜீவா – ‘கடல்’ துளசி நடிக்கும் ‘யான் ’

Read Next

ஒரு நல்ல கலைஞனை, தமிழ் கலைஞனை ஆதரிக்க வேண்டும் – பாரதிராஜா