நமது நாடு ஒரு மதச்சார்பற்ற நாடுதானா என்ற ஐயம் ஏற்படுகிறது என நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“இந்திய அரசியல் சட்டம், நமது இந்திய திருநாடு ஒரு மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும் இதன் மூலமாக ஒரு இந்திய குடி மகனுக்கு சமநீதி , உரிமை , மற்றும் சமத்துவம் என்று உத்தரவாதம் அளிக்கின்றது. .
ஆனால் இன்றைய நிலை என்ன தெரியுமா. இந்த உத்தரவாதங்கள் திரிக்கப் பட்ட வாசகங்களும், வார்த்தைகளும், புறம் பேசி பிரித்தாள்வதும், சுயநல போக்கும் தான் என்றாகி விட்டது .
மதசார்பின்மை என்றால் அரசியல் அமைப்பும் சரி , சமூக அமைப்பும் சரி , மதசார்புள்ள நம்பிக்கையையும் வழிபாட்டையும் ஏற்று கொள்ளாததே .நமது நாடு மதச் சார்பற்ற நாடுதானா என்ற ஐயம் வாக்கு வங்கி அரசியலை பார்க்கும் போதும், உணரும் போதும் தோன்றவே செய்கிறது .
நமது நாட்டில் ஜனநாயகமும் மதச் சார்பற்ற நிலையும் ஒரு புரிந்துக்கொள்ளபடாதது அல்ல. தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட வார்த்தையாகவே எடுத்து கொள்ளப்படுகிறது. நமது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையும் நாம் இருந்திருக்க வேண்டிய நிலையையும் நாம் கவனத்தோடு நினைத்து பார்க்க இதுவே சரியான தருணம்,” என்று கூறியுள்ளார் அஜித்குமார்.