எப்படித்தான் தேடி பிடிக்கிறாங்களோ, இப்படி டைட்டிலை…நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பா….
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’னு ஹிட்டடிச்ச விஜய் சேதுபதி இப்படி நடிச்சிட்டிருக்கிற ஒரு படத்தோட பேரு ‘பண்ணையாரும் பத்மினியும்’.
பண்ணையாரு, பத்மினின்னு சொன்ன உடனே கண்டிப்பா காதல் கதையா இருக்கும்னு நினைச்சிருப்பீங்க…ஆமாம்…அதேதான்…ஆனால் ‘பத்மினி’ங்கறது ‘பளபள’ ன்னு இருக்கிற ஒரு ‘கார்’ .
இன்னைக்குதான் வாய்ல கூட நுழையாத என்னென்னமோ கார்லாம் வருது. ஆனால், ஒரு 30, 40 வருஷத்துக்குக்கு முன்னாடிலாம் ‘பத்மினி பிரிமீயர் 118 E’ (சரியாத்தான் சொல்றோமா ?) ஒரு கார்தான் அப்படி ஒரு ஜபர்தஸ்தான கார். மிட்டா மிராசு, பண்ணையார், ஊர் பெருசு, நிலச்சுவான்தார், ஜமீன் இப்படி எல்லாரும் ஆசைப்பட்டு வாங்கி ஓட்டுன (?) கார்.
இப்படி ‘பத்மினி’ கார் வாங்கின ஒரு பண்ணையாருக்கும், அவர் கிட்ட ‘பத்மினி’யை ஓட்ட வேலைக்கு (டிரைவராதான்) சேர்ற விஜய் சேதுபதிக்கும் நடக்கிற கதைதான் இந்த படம். பண்ணையாரா ஜெயப்பிரகாஷ் நடிக்கிறாரு. அறிமுக இயக்குனர் அருண்குமார் டைரக்ட் பண்றாரு.
மீதி விவரத்தை இன்னைக்கு இந்த டீமை சந்திச்சிட்டு வந்து சொல்றோம்.