தனுஷ், வெற்றிமாறன் இணையும் ‘காக்கா முட்டை’

kakka-muttaiடந்த சில நாட்களாக நாளிதழ்களில் வெளியான பின்னர்தான் இப்படி ஒரு படம் தயாராகப் போகிறது என்ற செய்தியே வெளியே தெரிந்தது.

பொல்லாதவன், ஆடுகளம் கூட்டணியான ‘தனுஷ் – வெற்றிமாறன்’ இந்த படத்தின் மூலமாக தயாரிப்பாளராக இணைகிறார்கள். படத்தோட பேரு ‘காக்கா முட்டை’….காக்கா முட்டையை சாதாரணமா பார்த்துட முடியாது.

தனுஷ் ஏற்கெனவே அவருடைய தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ படத்தை தயாரித்து வருகிறார். வெற்றிமாறன் அவருடைய கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலமாக ‘காக்கா முட்டை’ படத்திற்காக தனுஷுடன் ஒரு தயாரிப்பாளராக இணைகிறார். வெற்றிமாறன் ஏற்கெனவே மீகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து சித்தார்த் நடிக்கும் ‘உதயம் ’ படத்தை தயாரித்து வருகிறார்.

நாமும் இரண்டு நாட்களாக ‘காக்கா முட்டை’ பற்றி விசாரித்துப் பார்த்ததில் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொண்டு எந்த ‘செய்தி முட்டை’யையும் போட மறுக்கிறார்கள்.

இப்போதைக்கு, இந்த படத்தை மணிகண்டன் இயக்குகிறார். இவர் ஒரு பிரபல ஒளிப்பதிவாளரும கூட. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்பதான் அடைகாக்கத் துவங்கியிருக்கிறார்களாம்….பார்த்து ‘பொன் முட்டை’யா கொடுங்க ஃபிரண்ட்ஸ்…..

Read Previous

‘பத்மினி’யை விரும்பற ‘பண்ணையார்’

Read Next

விஸ்வரூபம் – தடை நீங்கியது – நீதிமன்றம் உத்தரவு

Most Popular