‘தேசிங்கு ராஜா’வில் ‘இதயக்கனி’ விமல்

desingu raja_00006‘மனம் கொத்திப் பறவை’ வெற்றியை அடுத்து எழில் இயக்கி வரும் ‘தேசிங்கு ராஜா’ திரைப்படத்தில் ஹீரோ விமல் கதாபாத்திரத்தின் பெயர் ‘இதயக்கனி’.

விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம்புலி, சார்லி , ரவி மரியா, சாம்ஸ், ஆடுகளம் நரேன், வி. ஞானவேல், வடிவுக்கரசி மற்றும் பலர் நடிக்க இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்திலும் ஊர்ப் பக்கத்து காதலை சொல்கிறார் இயக்குனர் எழில். விமலின் பெற்றோர் தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் என்பதால் அவருக்கு ‘இதயக்கனி’ என்ற பெயராம். பிந்து மாதவி தீவிர ரஜினி ரசிகையாம். ரஜினி படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ‘ரவுசு’ கட்டும் பெண்ணாம். இவர்களிவருக்கும் வரும் காதலை நகைச்சுவையாக சொல்லப் போகிறார் இயக்குனர் எழில்.

“இரண்டு கிராமங்களுக்கிடையே நடக்கும் கதை. இன்றளவும் உறவுகளுக்கும் நட்புக்கும் மரியாதை கொடுத்து வருவது கிராமங்கள்தான்,” என்கிறார் இயக்குனர் எழில்.

Read Previous

வசூலில் ஹாலிவுட் படங்களை மிஞ்சிய ‘விஸ்வரூபம்’

Read Next

‘பத்மினி’யை விரும்பற ‘பண்ணையார்’

Most Popular