விஸ்வரூபம் திரைப்படம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டு ஹாலிவுட் படங்களை மிஞ்சிய வசூலை வாரிக் குவித்துள்ளது.
‘வீக் என்ட்’ என்று சொல்லக் கூடிய வார இறுதி நாட்களில் விஸ்வரூபம் படத்தின் வசூல் சராசரியாக ஆங்கிலப் படங்கள் வசூலிப்பதை விட அதிகமாக வசூலித்திருக்கிறது.
‘யுஎஸ் பாக் ஆபிசை’ப் பொறுத்த வரையில் படம் வெளியான சென்ற வார இறுதியில் 6,34,912 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. நம் இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 43 லட்ச ரூபாய். இது சென்ற வாரத்திய அதாவது மூன்று நாள் நிலவரம் மட்டுமே.
இன்னும் அதிகமான வசூலை அங்கு அள்ளிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.