‘ விஸ்வரூபம் ’ – முதல்வர் விளக்கம்

tamilnadu cmமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் விஸ்வரூபம் படப் பிரச்சனை தொடர்பான விளக்கங்களை அளித்தார்.

“மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே எனது அரசின் முதல் கடமை. இதை பலர் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் எந்த வித அச்சமும் இன்றி வாழ வேண்டும்.

விஸ்வரூபம் படத்தை வெளியிட்டிருந்தால் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு என உளவுத் துறையினர் அறிக்கை கொடுத்ததை அடுத்தே இந்த தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

படத்துக்கு அனுமதி அளித்து பெரிய கலவரம் ஏற்பட்டிருந்தால் மீடியாக்கள் அப்போதும் விமர்சித்திருக்கும்.

சினிமா ஒழுங்கு முறை சட்டத்தின் படி மாநில அரசு ஒரு படத்திற்கு நேரடியாக தடை விதிக்க முடியும்.

விஸ்வரூபம் தொடர்பாக முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், கமல்ஹாசன் ஒரு காட்சியைக் கூட நீக்கத் தயாராக இல்லை, சமரசத்துக்கும் வரவில்லை.

இரு தரப்பும் பேசி இப்பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள முன் வந்தால் தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

Read Previous

‘நீதான்டி ஒஸ்தி பொண்ணா…’ – ‘சேட்டை’ ஆரம்பமாயிடுச்சி…

Read Next

இன்றைய ரிலீஸ்…