யு டிவி தயாரித்துள்ள ‘சேட்டை’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இரண்டு டிரைலரையும் நான்கு பாடல்களையும் திரையிட்டார்கள். இதைப் பார்த்து எழுந்த கைதட்டல்களைக் கேட்டால் படத்தின் வெற்றி இப்போதே தெரிந்து விட்டது எனலாம்.
காரணம், சரியான கூட்டணி. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி…மல்டி ஸ்டார் காம்பினேஷன்… இன்றைய ரசிகர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கண்ணன்.
‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் ரீமேக்தான் இது. முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான ஒரு ஜாலியான படமாகவும் அதே சமயம் குடும்பத்தினரும் நிறைவாக கண்டு ரசிக்கும் விதத்திலும் படத்தை எடுத்திருப்பதாக இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.
தமன் இசையில் உருவான பாடல்களை திரையில் பார்த்த போது எல்லாமே ‘ஜாலி’ கொண்டாட்டமாகவே இருந்தது. ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி இருவரது அழகான நடனமும் ஒரு பக்கம் என்றால், அவற்றை விட பிரேம்ஜியின் அதிரடியான ஒரு நடனப்பாடல் அரங்கையே அதிர வைத்தது.
அந்த பாடல், கானா பாலா எழுதி பாடிய ‘நீ தான்டி ஒஸ்தி பொண்ணா…..’ என்ற பாடல். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பாடலை கானா பாலா மேடையில் பாடி மீண்டும் அரங்கை அதிர வைத்தார். இந்த ஆண்டின் ’சூப்பர் ஹிட்’ பாடல்கள் வரிசையில் இப்போதே சேர்ந்து விட்டது இந்த பாடல்…காதலி ஏமாற்றி விட்டு போனதும் ஒரு காதலன் பாடும் பாடலாம் இது…கேட்கவா வேண்டும்…இளைஞர்களின் வரவேற்புக்கு…
ரெடி ஸ்டார்ட் தி மியூஸிக்…..‘சேட்டை’ மியூசிக்…