கடல் சார்ந்த கதைகள் கொண்ட இரண்டு படங்கள் இன்று வெளியாகின்றன. குரு – சிஷ்யன் இயக்கிய இரண்டு படங்கள் அவை. குரு மணிரத்னம் , சிஷ்யன் பிஜாய் நம்பியார்…
கடல்
மெட்ராஸ் டாக்கீஸ் , ஜெமினி தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியிருக்கும் படம். இசை – ஏ.ஆர். ரகுமான். கௌதம் கார்த்திக், துளசி, அர்ஜுன், அரவிந்த் சாமி, லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
டேவிட்
ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், ரேம்பேஜ் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க பிஜாய் நம்பியார் இயக்கியிருக்கும் படம். அனிருத், பிரசாந்த் பிள்ளை, ரெமோ, மாட்டி பாணி, மாடர்ன் மாஃபியா, ப்ராம்பதூரா ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். விக்ரம், ஜீவா, இஷா ஷெர்வானி, தபு, நாசர், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

