கதாநாயகி என்றாலே கவிதைதானே என ரசிக்கும் நமக்கு கவிதை எழுதும் கதாநாயகி ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார்.
அவர் மஹிமா நம்பியார். ‘சாட்டை’ படத்தில் கதாநாயகியாக அறிமுமகமானவர்.
அறிமுகப்படத்தில் மாணவியாக நடித்தவர் உண்மையிலேயே ஒரு சிறந்த மாணவியாவார். பள்ளி இறுதித் தேர்வில் 96 சதவீத மதிப்பெண் பெற்றவராம்.
இவரோட ஸ்பெஷாலிட்டியே…ஸாரி…இவரோட சிறப்பே…இவருக்கு தமிழ் சரளமா பேச வரும் என்பதுதான். அது மட்டுமல்ல கவிதைகளும் எழுதுபவர். கொஞ்சம் மலையாள வாசம் வீசினாலும் திருக்குறளையும் ஒப்புவிப்பவர்.
மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் இவற்றை கற்றவர். அழகிய
குரலுக்கும் சொந்தக்காரர்…இசையமைப்பாளர்கள் கவனிக்க…
சாட்டை படத்தையடுத்து ராஜபாண்டி இயக்கும் ‘என்னமோ நடக்குது’ படத்தில் விஜய் வசந்த் ஜோடியாக நடிக்கிறார். ‘புத்திசாலிப் பெண்ணை நடிக்க ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் ’ என மஹிமாவை நாயகியாக்கியிருக்கிறார் இயக்குனர்.
சீக்கிரமே சினிமாவுக்கும் மஹிமா பாட்டு எழுதினால் ஆச்சரியமில்லை…