விஜய், அஜித் படங்களை பாலா இயக்குவாரா ?

director-balaதமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் பாலா.

விக்ரம், சூர்யா, ஆர்யா ஆகியோருக்கு தமிழில் அவர்களுக்கென்று ஒரு மார்க்கெட் உருவாகக் காரணமானவர்.

ஆனால், இதுவரை விஜய், அஜித் இருவரையும் வைத்து படம் எதையும் இயக்கவில்லை. ‘நான் கடவுள்’ படத்தில் கூட முதலில் அஜித்தான் நடிப்பதாக இருந்தது.

இவர்களிருவர் நடிக்கும் படங்களை இயக்க மாட்டீர்களா என்ற கேள்விக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலா பதிலளித்திருக்கிறார்.

“விஜய் என் படத்தில் நடிக்க விரும்புவதாக சொன்னது அவர் என் மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது. விஜய்யை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அவரை இதுவரை யாரும் காட்டாத வேறு ஒரு பரிமாணத்திற்கு நான் தூக்கிச் செல்ல வேண்டும். அப்படி ஒரு களமும் கதாபாத்திரமும் அமைந்தால், நிச்சயம் அது நிறைவேறும்.”

“அஜித்தும் நானும் இணைவதற்கு இரண்டு முறை முயற்சி செய்தோம். நடக்கவில்லை. நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும். யார் கண்டது ? ,” என  பதிலளித்துள்ளார் பாலா.

பார்பபோம், இனியாவது இவர்கள் இணைகிறார்களா என்று ?!

Read Previous

டாக்டர் பென்னி – கவுண்டமணி ரீ என்ட்ரி…

Read Next

ஜெயம் ரவி – ராஜா இணையும் புதிய படம்