ஜெயம் ரவி – ராஜா இணையும் புதிய படம்

jayam-ravi-jeyam-rajaண்ணன், தம்பியான வெற்றிக் கூட்டணி ஜெயம் ராஜா, ஜெயம் ரவி  மீண்டும் இணைய இருக்கிறார்கள்.

இந்த புதிய படத்தை ஏஜிஎஸ் மூவீஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கப் போகும் 12வது படம் இது.

ஜெயம், எம். குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி ஆகிய படங்களைத் தொடர்ந்து இவர்கள் மீண்டும் இணைகிறார்கள். இவை  அனைத்துமே வெற்றிப் படங்கள்.

ஜெயம் ராஜா கடைசியாக விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படத்தை இயக்கினார்.

படத்தைப் பற்றி ஜெயம் ராஜா கூறுகையில் ,“ சர்வ நிச்சயமாக இதுஒரு ஆக்‌ஷன் படம்! ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை நகரும்! ஆனால் ஆக்‌ஷன் வகை திரைப்படங்களில் புத்தம்புது டைமன்ஷனில் காட்சிகள் அமைக்கப் போகிறோம்! அந்தவகையில் தமிழ்சினிமாவின் மாஸ் ஹீரோ ஆக்‌ஷன் ஜானர் படங்களில் இந்தப் படம் கண்டிப்பாக புதிய எல்லைகளைத் தொடும். திரைக்கதை அதற்கு துணையாக இருக்கும்”, என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

படப்பிடிப்பு மே மாதம் முதல் ஆரம்பமாகிறது.

Read Previous

விஜய், அஜித் படங்களை பாலா இயக்குவாரா ?

Read Next

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…

Most Popular