ஒருபக்கம் நடிப்பு, இன்னொருப் பக்கம் தனக்குள் இருக்கும் பாடகனின் துடிப்பு என, ஒரு வெற்றிகரமான ‘பிளேபேக் சிங்கராக’ தனது திரைப்பயணத்தை வகுத்துக் கொண்டிருக்கும் எஸ்.டி.ஆர் சிம்பு, தனது நண்பர்களின் படங்களுக்காக மட்டும் பாடிக்கொடுக்காமல், யார் அழைத்தாலும் விரும்பி சென்று தனது குரலை வழங்கி வருகிறார்.
எஸ்.டி.ஆர் பாட்டெழுதி, இசையமைத்துவரும், ‘லவ் ஆந்தம்’ ஆல்பத்தின் முன்னோட்டம், தேசம் தாண்டி, உலகம் முழுவதும் பல மில்லியன் இசை ரசிகர்களை இவர்பால் திருப்பியிருக்கும் இந்தநேரத்தில், தமிழ்சினிமாவுக்கே எனது முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் பாடல்களை பாடி வருகிறார் சிம்பு!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் படைப்பாக்கத்தில் உருவான ஒரு ‘பைலா’ வகைப் பாடலை, ‘காதல் வைரஸ்’ படத்துக்காக பாடிக்கொடுத்த சிம்புவுக்கு அன்று வழங்கப்பட்ட தொகை ஐயாயிரம் ரூபாய்! இன்று பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்துக்காக பாடிய பாடலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஊதியம் ஐந்து லட்சம்!
எத்தனை காஸ்ட்லியான பின்னனிப் பாடகராக இருந்தால் என்ன…!? ஆந்திரப்படவுலகில் இருந்து , முன்னனி நாயகர்களின் படங்களுக்கு பாடல்கள் பாட வரும்படி அழைப்புகள் குவிந்தவண்ணமிருக்க… ‘ஆல் ரவுண்டர் எஸ்.டி.ஆர்’ ரெடி டூ ராக்க்க்க்….!