மிஷ்கின் இயக்கம், தயாரிப்பில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் பூஜை இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பிரபஞ்சன், தயாரிப்பாளர் கமீலா நாசர், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, நடிகர் செல்வா, நாயகன் ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
வழக்கு எண் 18/9 படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீ இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். இப்படம் குறித்து ஸ்ரீ கூறுகையில், ” நான் கொடுத்து வைத்தவன் . முதல் படம் பாலாஜி சக்திவேல் , இரண்டாவது படம் மிஷ்கின் என தலை சிறந்த இயக்குனர்களிடம் பணி புரிவது என் பாக்கியமே .
என் முதல் இரண்டு படங்களுமே கதை அமைப்பில் மட்டுமின்றி தலைப்பிலும் மிகவும் வித்தியாசமாக உள்ளது எனக்கு பெருமையானது . நான் இங்கே இயக்குனரிடம் நிறையவே பயின்று வருகிறேன் , புத்தகங்கள் படிப்பது உட்பட . அவர் படத்தில் நடிப்பதற்கு முக்கிய தகுதி புத்தகம் படிப்பதுதான்” என புன்னகையுடன் கூறுகிறார்.