‘அமீரின் ஆதிபகவன்’ குடும்பத்துடன் பார்க்கலாம் – அமீர்

aadhi-bagawan‘அமீரின் ஆதி பகவன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டாலும், இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ ஆதி பகவன் திரைப்படம் இந்து மதக் கடவுள்களை அவமதிப்பதாக ஏற்பட்ட குற்றச்சாட்டின் காரணமா போலீஸ் கமிஷனர் அலுவலகம், முதலமைச்சர் தனி செல் பிரிவு மற்றும் தணிக்கைக் குழு ஆகியோரிடம் 100க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

பலத்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே எனது ‘ஆதி பகவன்’ திரைப்படம் ‘அமீரின் ஆதி பகவன்’ என மாற்றப்பட்டு , ‘ஏ’ சான்றிதழுடன் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘ஆரோ 3டி’ ஒலி அமைப்பில் ஆசியாவிலேயே இரண்டாவது திரைப்படமாக நாளை உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும், எனது திரைப்படத்திற்கு சில குழுக்களை திருப்திப்படுத்தும் நோக்கத்துக்காக  ‘ஏ’ சான்றிதழ் வழங்கி இருந்தாலும் , குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

‘சிங்கர் சிம்பு’ சம்பளம் 5 லட்சம்…

Read Next

‘டிஸ்னி யு டிவி’ தயாரிக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’